Ministry of Urban Development and Sacred Area Development

Sinhala (Sri Lanka)English (United Kingdom)

பிரதான பட்டியல்

நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முன்பக்கம் நிறுவனங்கள்

இவ்வமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள்

  1. தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம்
    இலங்கையில் ஆதிக்கப்பிராந்தியத்தில் பொருளாதார, சமூக, பௌதீக, சுற்றாடல் விடயங்களை ஒருங்கிணைந்து திட்டமிடுவதன் மூலமாக அவற்றை மேம்படுத்தி ஒழுங்கமைக்கும் நோக்கத்துடன், தேசிய பௌதீக திட்டமிடல் கொள்கைகள், வரைவுகள், உபாயங்கள் ஆகியவற்றை வகுத்தலும் பிராந்திய மற்றும் உள்ளூர் திட்டங்கள் மூலம் அத்தகைய தேசிய கொள்கைகளும் வரைவுகளும் அமுலாக்கப்படுவதை உறுதி செய்தலும் கண்காணித்தலும்.
    தேசிய பெளதீக திட்டமிடல் திணைக்களத்தின் பிரதான பணிகளில் ஒன்று, தேசிய பௌதீக திட்டமிடல் கொள்கைகள், தேசிய பௌதீக திட்டமிடல் வரைவு என்பவற்றை தயாரித்தல். இவை தயாரிக்கப்பட்டதும் மேதகு ஜனாதிபதியால் தலைமை தாங்கப்படும் தேசிய பௌதீக திட்டமிடல் செயற்பாட்டு குழுவினால் 2007 ஜுலை 03ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்டன.
    என்.பீ.பீ.டீ. பற்றி மேலும்....
  2. நகர அபிவிருத்தி அதிகாரசபை
    நகர அபிவிருத்தி அதிகாரசபை என்பது இலங்கையில் நகரத்திட்டமிடல், நிலைபேறான நகர அபிவிருத்தி ஆகியவற்றுடன் ஈடுபாடுடைய பன்முகமாக ஒழுக்கநெறிப்படுத்தும் ஒரு நிறுவனமாகும். யூ.டீ.ஏ. ஆனது நாடு முழுவதிலுமுள்ள நகர்ப்புற பிரதேசங்களில் திட்டமிடலுக்கும் அபிவிருத்திக்கும் பொறுப்பாக உள்ளது. நகரத்திட்டமிடல் மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான பிரச்சனைகள் குறித்து மாகாணசபைகளுக்கும், உள்ளூராட்சி சபைகளுக்கும் மற்றும் நிறுவனங்களுக்கும் ஆலோசனை சேவைகளை வழங்கி வருகிறது. அபிவிருத்தி தேவைகளுக்காகவும் அதேபோன்று உள்நாட்டு முதலீட்டாளர்களின் தேவைகளுக்காகவும் காணிகளை கொண்ட வங்கியொன்றை ந.அ.அ. பேணிவருகின்றது. வாடிக்கை நிறுவனங்களின் பாரிய செயற்றிட்டங்களை மேற்பார்வை செய்யும் மற்றும் நிறைவேற்றும் பொறுப்பையும் ந.அ.அ. ஏற்றுக்கொண்டுள்ளது. நாட்டிலுள்ள நகர்ப்புற பிரதேசங்களிலிருந்து தேசிய பொருளாதாரத்துக்கான பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, ந.அ.அ. பல்வேறு பாரிய செயற்றிட்டங்களை மேற்கொண்டுள்ளது. வறுமைக்கோட்டின் கீழ்வரும் பிரதேசங்களிலும் அபிவிருத்திக்கான வாய்ப்புக்கள் சம அளவில் கிடைப்பதை உறுதிசெய்தலே இச்செயற்றிட்டங்களின் குறிக்கோளாகும்.
    யூ.டீ.ஏ பற்றி மேலும்.....
  3. இலங்கை காணி மீட்டல், அபிவிருத்தி கூட்டுத்தாபனம்
    தாழ்நிலப்பகுதிகளிலுள்ள சதுப்பு நிலங்களின் மீட்டலுக்கும் அபிவிருத்திக்கும் பொறுப்பாக இருக்கும் அதேவேளை போதியளவு வெள்ளத்தடுப்பு பிரதேசங்களை பேணிப்பாதுகாத்தலும் இலங்கை காணி மீ்ட்டல் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முதன்மையான குறிக்கோளாகும். மேலும், அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு அத்தியாவசியமான அபிவிருத்தி செய்யப்பட்ட காணிகளின் பற்றாக்குறை எனும் பிரச்சனையை தீர்ப்பதற்காக, வியாபார ரீதியில் காணிகளை மீட்டு அபிவிருத்தி செய்யும் பணிகளையும் இக்கூட்டுத்தாபனம் மேற்கொள்கிறது.
    எஸ்.எல்.எல்.ஆர்.டீ.சீ. பற்றி மேலும்....
  4. வ/ப நிலவுடைமை பரிவர்த்தனை (தனியார்) நிறுவனம்
    வ/ப நிலவுடைமை பரிவர்த்தனை நிறுவனம் (REEL) என்பது கொழும்பு மாநகரில் சேரிப்புறங்களிலும் குடிசைப்பகுதிகளிலும் வசிப்பவர்களது வீட்டுப்பிரச்சினைகளை சமாளிப்பதற்காக, நகர அபிவிருத்தி அதிகாரசபை (ந.அ.அ), இலங்கை காணி மீட்டல் அபிவிருத்தி கூட்ட (இ.கா.மீ.அ.கூ.), தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை (தே.வீ.அ.அ.), கொழும்பு மாறகர சபை (கொ.மா.ச.), நகர அபிவிருத்தி, புனித பிரதேச அபிவிருத்தி அமைச்சின் நிலைபேறான நகரத்துறை வேலைத்திட்டம் ஆகியவற்றுடன் கூட்டிணைக்கப்பட்டுள்ள கம்பனியாகும்.
    REEL பற்றி மேலும் ....

  5. நகர்ப்புற குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபை
    வசதிக்குறைவான குடியிருப்புப்பகுதிகளில் வசிக்கும் மக்களது வாழ்க்கைத்தரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடிய "நகர்ப்புற குடியிருப்புகளுடன் தொடர்புடைய தேசிய கொள்கை" ஒன்றை வகுத்து "அத்தகைய கொள்கை அமுலாக்கத்தை உறுதிசெய்தலே" யூ.எஸ்.டீ.ஏ. இன் குறிக்கோளாகும்.
    யூ.எஸ்.டீ.ஏ. பற்றி மேலும்....

Real Estate Exchange (Pvt) Ltd. (REEL) is the company incorporated with Urban Development Authority (UDA), Sri Lanka Land Reclamation & Development Corporation (SLLRDC), National Housing Development Authority (NHDA), Colombo Municipal Council (CMC) and the Sustainable Township Programme of the Ministry of Urban Development and Sacred Area Development to address the shelter issues of slum and shanty dwellers in the city of Colombo.