Ministry of Urban Development and Sacred Area Development

Sinhala (Sri Lanka)English (United Kingdom)

பிரதான பட்டியல்

நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முன்பக்கம் கருத்திட்டங்கள்

பயனாளி
நகர அபிவிருத்தி, புனித பிரதேச அபிவிருத்தி அமைச்சு
ஆலோசனை

ஹம்பாந்தோட்ட கருத்திட்ட முகாமைத்துவ பிரிவு
முன்னுரிமை கருத்திட்டங்கள் (பீ.எம்.யூ - எச்.பீ.பீ)
நிதியிடப்படுவது
கொரிய சர்வதேச கூட்டுறவு நிறுவனம்
கட்டம் i
1500 இருக்கைகளை கொண்ட கேட்போர்கூட கட்டிடம்
(7629.46 சதுர மீ.) 6.0 மில்.அமெரி.டொலர்
வேலைத்தல பரப்பளவு கொரிய அரசாங்கத்தின் நன்கொடை
112,030.19 சதிர மீ. ( 27.67 A) இலங்கை அரசாங்கம்
கட்டிட உள்ளடக்கம் தளப்ரப்பு கட்டம் ii
8,081.42. சதிர மீ. செயற்குழு அறைகள், பிரதான கூடம் மற்றும் ஏனைய இரண்டாம்பட்ச
ஒப்பந்தக்காலப்பகுதி வசதிகள் (7652.2 சதுர மீ) 9.3 மில்.அமெரி.டொலர்
15,281.66 சதிர மீ. ஒப்பந்தக்காரர் டீ.ஏ.ஈ.பி.ஓ
ஒப்பந்தம்
பொறியியல் நிர்மான கம்பனி
20 மாதங்கள் (2009 பெப்.18ஆம் திகதி முதல் 2010 ஒக்.18ஆம் திகதி வரை) (கொரியா)


அமைவிடம் :
ஸ்ரீபோபுர, ஹம்பாந்தோட்ட
கருத்திட்ட செலவினம் :
20.375 மில். அமெ. டொலர்
வேலைத்தல பரப்பளவு :
67 ஏக்கர்கள்
மொத்த தளப்பரப்பு :
26,308,34 சதுர மீற்றர்
ஒப்பந்தக்காலப்பகுதி :
24 மாதங்கள்
ஆரம்பம் :
2007 ஒக்டோபர் 15ஆம் திகதி
வரைபட குரிப்புரைகள்
பயனாளி :
நகர அபிவிருத்தி, புனித பிரதேச அபிவிருத்தி அமைச்சு
பிரதான கட்டிடம்
17,968.76.சதுர மீ. எண்ணக்கரு வரைபடமும் அமுலாக்கும் நிறுவனமும் :
நகர அபிவிருத்தி அதிகாரசபை
மாநகரசபை கட்டிடம்
960.55சதுர மீ. ஒப்பத்தத்தின் வகை :
வடிவமைத்து நிர்மானித்தல்
பொது நூலக கட்டிடம் 2,078.53சதுர மீ. நிதியளிக்கும் நுட்பம் :
ஈ.எக்ஸ் - ஐ.எம். வங்கி (ஈ.டீ.சீ.எவ்) & ஜீ.ஓ.எஸ்.எல்
பாரிய வாகனசாலை 648.00 சதுர மீ. ஆலோசனை :
கே.சீ.ஐ. இன் ஒத்துழைப்புடன் ந.அ.அ. இன் பீ.எம்.யூ. - எச்.பீ.பீ
சிறிய வாகனசாலை 260.00 சதுர மீ. (தலா) ஒப்பந்தக்காரர்
:
வ/ப கியன்னம் முயற்சியாண்மை நிறுவனம்
தங்குமிட அலகுகள் (25எண்) 129.30 சதுர மீ. (தலா)
சாரதிகள் விடுதி 120.00 சதுர மீ.

2000ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கை அரசாங்கம் (ஜீ.ஓ.எஸ்.எல்) லுணாவ சுற்றாடல் மேம்பாடு, சமுதாய அபிவிருத்தி கருத்திட்டத்திற்கான நிதியை வேண்டி ஜப்பானிய அரசாங்கத்துக்கு (ஜீ.ஓ.எஸ்.எல்) முன்மொழிந்தது. முன்மொழியப்பட்ட கருத்திட்ட பிரதேசமானது கொழும்பு மாவட்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளதுடன் அது வடக்கிலுள்ள தெஹிவல - கல்கிஸ்ஸ மாநகர சபை (சீ.எம்.எம்.சீ) பிரதேசம் தொடங்கி தெற்கிள்ள மொறட்டுவ மாநகரசபை (எம்.எம்.சீ.) பிரதேசம் வரை பரந்துசெல்லும் லுணாவ ஏரியின் (6.15 சதுர கி.மீ.) வடிகால் பிரதேசத்தை உள்ளடக்குகிறது.

2002ஆம் ஆண்டு தொடங்கி 08 வருட காலப்பகுதியில் இந்த லுணாவ சுற்றாடல் மேம்பாடு, சமுதாய அபிவிருத்தி கருத்திட்டத்தினை அமுலாக்குவதற்காக, இலங்கை அரசாங்கத்துக்கும் ஜப்பானின் சர்வதேச கூட்டுறவு வங்கிக்கும் (ஜே.பி.ஐ.சீ) இடையில் 2001 டிசம்பர் மாதம் கடன் உடன்படிக்கை (எஸ்.எல் - பீ 73) கைச்சாத்திடப்பட்டது. ஜே.பி.ஐ.சீ. இடமிருந்து கிடைக்கப்பெறும் நிதியுதவியை கொண்டு நகர அபிவிருத்தி, புனித பிரதேச அபிவிருத்தி அமைச்சு இக்கருத்திட்டத்தை அமுலாக்குகிறது.

இக்கருத்திட்டத்தின் குறிக்கோள்களாவன: வெள்ளநீர் வடிகாலமைப்பு தொகுதியை சீராக்குவதன் மூலம் லுணாவ பிரதேசத்தில் வெள்ளத்தினால் சேதங்கள் ஏற்படுத்துவதை தடுத்தல், புனர்வாழ்வு நிலையங்களுடன் கூடவே தெரிவுசெய்யப்பட்ட மேம்பாட்டு நிலையங்களிலும் சீரான உட்கட்டமைப்புக்களை வழங்குவதன் மூலம் மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வேண்டிய சுகாதாரமான சூழலை ஏற்படுத்தல், சமுதாய மக்களின் வாழ்க்கை முறைகளை சுற்றாடல் ரீதியில் நிலைபேறுடையதாக்குவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத்தரங்களை மேம்படுத்தல், வழக்கமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் பிரதேசத்தின் இடப்பரப்பும் அதன் காரணமாக பாதிக்கப்படும் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையும் முறையே 1.04 சதுர கி.மீ. ஆகவும் 19,700 ஆகவும் காணப்படுகிறது.

நகர அபிவிருத்தி, புனித பிரதேச அபிவிருத்தி அமைச்சின் கிராமிய நீர் வழங்கல், சுத்திகரிப்பு பிரிவு (ஆர்.டப்ளியூ.எஸ்.எஸ்.டீ) என்பது இலங்கையின் கிராமிய நீர்வழங்கலுக்கும் சுத்திகரிப்புத்துறையின் அபிவிருத்திக்கும் பொறுப்பாகவுள்ள தேசிய முகவர் நிறுவனமாகும். தற்போது இலங்கையிலுள்ள 13 மாவட்டங்களில் பாரிய சமுதாய நீர்வழங்கல், சுத்திகரிப்பு கருத்திட்டங்கள் இரண்டை உலகவங்கி, ஜப்பானிய சர்வதேச கூட்டுறவு வங்கி (ஜே.பி.ஐ.சீ), இலங்கை அரசாங்கம் (ஜீ.ஓ.எஸ்.எல்) மற்றும் கூட்டாக பயனடையும் சமுதாயங்களிலிருந்து கிடைக்கப்பெறும் நிதியுதவிகளை கொண்டு அமுலாக்கும் பொறுப்பை ஆர்.டப்ளியூ.எஸ்.எஸ்.டீ ஏற்றுக்கொண்டுள்ளது. தீங்கற்ற குடிநீர், அடிப்படை சுத்தம், சுகாதாரக்கல்வி, சுற்றாடல் வேலைத்திட்டங்கள் போன்றவற்றை ஒன்று சேர்ப்பதன் மூலமும் சமுதாயத்தின் நடவடிக்கைகளை சமூக - பொருளாதார, கலாச்சார துறை நோக்கி பரம்பலடைய செய்வதன் மூலமும் குறிக்கப்பட்ட இலக்குகளை அடையக்கூடிய வகையில் இக்கருத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான ஒன்று சேர்க்கும் அணுகுமுறையானது, சமுதாய நீர் வழங்கல், சுத்திகரிப்பு கருத்திட்டம்-i (சீ.டப்ளியூ.எஸ்.எஸ்.பீ-i) இனை அமுல்படுத்திய காலப்பகுதியில், உச்சளவு வெற்றி அளிக்கக்கூடியது என பரிசோதித்து நிரூபிக்கப்பட்டுள்ளது. உலகம் பூராவும் வகுக்கப்பட்டுள்ள இதுபோன்ற 200 கருத்திட்டங்களிடையே இந்த வெள்ளோட்ட கருத்திட்டத்தை அதிசிறந்த நடைமுறை எனவும் நல்லமுறையில் நிருவகிக்கப்படும் கருத்திட்டம் எனவும் உலகவங்கி கணிப்பிட்டுள்ளது. சீ.டப்ளியூ.எஸ்.எஸ்.பீ ஊடாக பரிசோதிக்கப்பெற்ற இப்புதுமையான அணுகுமுறையின் அடிப்படையில், கிராமிய நீர் வழங்கல், சுத்திகரிப்பு துறைக்கான தேசிய கொள்கை ஒன்று வகுக்கப்பட்டு தற்போது நாடு முழுவதிலும் அமுலாக்கப்பட்டுவருகிறது.
இலக்குகள்
தீங்கற்ற குடிநீர், போதிய சுத்திகரிப்பு வசதிகள், சகாதார நடைமுறைகள், சுற்றாடல் பாதுகாப்பு போன்றவற்றை வழங்குதல் மூலமும் பொருளாதார, சமூக, சமய, கலாச்சார நடவடிக்கைகளை முன்னேற்றுவதன் மூலமும் கிராமிய, தோட்டப்பகுதி மக்களின் வறுமை நிலையை குறைப்பதுடன் அவர்களது வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல்.

கடந்த மூன்று தசாப்தங்களாக, கொழும்பு தலைநகர பிரதேசத்தில் வியாபாரமும் வர்த்தகமும் செறிவடைந்து வருவதுடன் மக்கட்தொகையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இத்தகைய போக்கினால், இப்பிரதேசத்தில் துரிதமாக பெருகி வரும் வீதிப்போக்குவரத்தின் விளைவாக, இப்பிரதேசத்தில் போக்குவரத்து நெருக்கடியானது அதிகரித்துச்செல்லும் வேகத்தில் பரந்துள்ளது.

சேவை உட்கட்டமைப்பை பொறுத்தவரை உரிய சீர்திருத்தங்களை கொண்டிராத அத்தகைய நெருக்கமான நகரம் விரிவடைந்து செல்லும் அதேசமயம், வசிக்கும் சுற்றாடல் மோசமடைவதும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

உரியமுறையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லமுறையில் நடாத்தப்படும் சிறந்த வதிவிடச்சூழலை கொண்ட நகர மையங்களில் நகரத்தின் தொழிற்பாடுகளை பரவலக்குதல் இதனை தடுத்துநிறுத்தவதற்கான ஒரு வழியாகும்.

 

வெளிச்சுற்றுவட்ட நெடுஞ்சாலை என்பது, (ஓ.சீ.எச்) கொழும்பு - கட்டுநாயக்க கடுகதிப்பாதையையும் தென்னக போக்குவரத்து அபிவிருத்தி கருத்திட்டத்தையும் இணைக்கும் புதியதொரு பிரவேச கட்டுப்பாட்டு சுற்றுவட்ட நெடுஞ்சாலையாகும். இது கொழும்பு நகரின் மத்தியிலிருந்து 10-15 கி.மீ. தூரத்திற்கு அப்பால் 29 கி.மீ நீளமாக அமையவுள்ளது. இது ஒரு பக்கப்புற வீதியாக இருப்பதுடன் கொழும்பிலிருந்தும் கொழும்பை நோக்கியும் உருவாகும் வாகன நெரிசலை மேலும் சிறந்த முறையில் ஐதாக்கவும் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் விளைவாக கொழும்பு தலைநகர் பிராந்தியத்தின் போக்குவரத்து நெரிசல் தளர்வடையும். ஓ.சீ.எச். இன் புறநகர் பாகத்தில், குறித்த ஓ.சீ.எச். இன் நிதிசார் செயற்பாட்டுத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டி, இந்நெடுஞ்சாலையை நோக்கி போக்குவரத்தை குவியச்செய்வதன் மூலம், ஓ.சீ.எச். இன் வாகனக்கடவைக்கு அணித்தாகவுள்ள புறநகர்ப்பகுதிகளுக்கான புதியதொரு அபிவிருத்தி வேலைத்திட்டத்தை தயாரித்து அமுலாக்கும் பணியும் இதில் அடங்கியுள்ளது.

ஆகவே, நகர அபிவிருத்தி, புனித பிரதேச அபிவிருத்தி அமைச்சானது, ஓ.சீ.எச். இன் வாகனக்கடவைகளுக்கு அணித்தாக அமையப்பெற்ற கொட்டாவ, கடுவெல, கடவத்த ஆகிய மூன்று முக்கிய புறநகர் பகுதிகளை, பொருத்தமான திட்டமிடல் மற்றும் வீதிகள், மின்சாரம், நீர் வடிகாலமைப்பு, கழிவகற்றல் முதலிய உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல் மூலம் புதிய உயிரோட்டம் மிக்க புறநகர்ப்பகுதிகளாக தரமுயர்த்துவதற்கென முன்னுரிமை வழங்கியுள்ளது.

"மஹிந்த சிந்தனை" யில் குறித்துரைக்கப்பட்டுள்ள "புதியதொரு இலங்கையின் காட்சி" "கண்ணுக்கெட்டிய தூரம் வரை 2006-2016 பத்து வருட அபிவிருத்தி படலம்" எனும் அரசாங்கத்தின் அபிலாஷைமிக்க பத்து வருட நகர அபிவிருத்தி படலத்துக்கும் (யூ.டீ.எல்), சிறந்த உள்ளூராட்சி குறித்து அமைச்சுக்களுக்கிடையான ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்காக, நகர அபிவிருத்தி, மாகாணசபைகள், உள்ளூராட்சி ஆகிய துறைகளுக்கு பொறுப்பான அமைச்சுக்களிலுள்ள, உரிய முறையில் வடிவமைக்கப்பட்ட உதவிப்பிரிவுகளினால் உதவியளிக்கப்படும் முன்மொழிவுக்கும் இந்நிகழ்ச்சித்திட்டம் ஆதரவளிக்கின்றது.

கூட்டான நகராட்சி செயற்பாடுகளை நிறுவனமயமாக்கல் மூலம், வறுமைக்குறைப்பு குறித்த நகராட்சி மீது நாடளாவிய ரீதியில் முத்திரை பதிப்பதுடன், தேசிய நிலைபேறான அபிவிருத்திக்கு ஆதாவளிக்கும் உயிரோட்டம் மிக்கதொரு நகர்ப்புற பிரிவை உருவாக்கவும், தேசிய நகர அபிவிருத்தியில் எம்.டீ.ஜீ.களின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் முடியும். இந்நிகழ்ச்சித்திட்டமானது, எம்.டீ.ஜீ.க்களின் நிறுவனமயமாக்கலுக்கான ஆதரவையும் தேசிய, மாகாண மட்டங்களில் சிறந்த நகராட்சியையும் உறுதிசெய்கிறது. நாடாளவிய ரீதியில் இந்நிகழ்ச்சித்திட்டமானது, தேசிய அறிவார்ந்த வலைப்பின்னல் ஒன்றினுடாக நல்ல நடைமுறைகளை கைக்கொண்டு அவற்றை மேம்படுத்துவதில் உதவியளிப்பதுடன், அமைச்சு கட்டமைப்பின் ஆற்றல் விருத்திக்கு வேண்டியதென முன்மொழியப்பட்டுள்ள உபாயமாகிய, பயிற்சிகளை அளிப்பதில் ஒருங்கிணைப்பை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட அடிப்படையான நிறுவனமயமாக்கலுக்கான நேரடி ஆதரவையும் அளிக்கிறது.