Ministry of Urban Development and Sacred Area Development

Sinhala (Sri Lanka)English (United Kingdom)

பிரதான பட்டியல்

நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முன்பக்கம் சமாச்சாரம் செத்சிறிபாய ii ஆம் பாகம் ஆரம்பம்

செத்சிறிபாய ii ஆம் பாகம் ஆரம்பம்

செத்சிறிபாய ii ஆம் பாகம் வேலைத்திட்டத்தின் கீழ் பத்தரமுல்லையில் புதிய மேல் கட்டடத் தொகுதியின் நிருமாணப்பணிகள் 2009ஆம் ஆண்டு ஜூலை 22ந் திகதி ஆரம்பமானது. நகர அபிவிருத்தி, புனிதப் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்த்தன, நகர அபிவிருத்தி அமைச்சர் கௌரவ ரோஹண திசாநாயக்க நகர அபிவிருத்தி, புனிதப் பிரதேச அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி பி. இராமானுஜம் ஆகியோர் ஜுலை 14ந் திகதி புற்தரையை வெட்டி ஆரம்பித்து வைத்தனர்.

கௌரவ தினேஷ் குணவர்த்தன இங்கு உரையாற்றுகையில் கொழும்புக்கு வெளியே உள்ள அலுவலகங்களை தலைநகர் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டேக்கு மாற்றும் பரந்தளவிலான முயற்சி இது என குறிப்பிட்டார் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுவதற்கு அதிகாரம்  அளித்த அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கும் அமைச்சரவைக்கும் நன்றி தெரிவித்தார் "மஹிந்த சிந்தனை" வேலைத்திட்டத்தின் கீழ் இது போன்ற பாரிய கட்டிடங்கள் உள்ளூர் பொறியிலாளர்களாலும் நிபுணத்துவத்தாலும் கட்டிடக் காரர்களாலும் நடைமுறைப்படடுத்தப்படுவதால் சுதேசிய கட்டிட பிரிவினர் பெரும் நன்மை அடைவர் எனவும் அவர் குறிப்பிட்டார். கௌரவ ரோஹண திசாநாயக்கவும் அங்கு உரையாற்றினார்.  அமைக்கப்பட உள்ள இந்தக்கட்டம் 01 ஹெக்டயர் (2.5 ஏக்கர்) விஸ்தீரணம் உள்ளதாகவும் 13 மாடிகளைக் கொண்டதாகவும் (4-12) மாடிகளின் மொத்த பரப்பளவு 32.000 எம்2 (350000 சதுர அடி) கொண்டதாகவும் இருக்கும். தரையில் வாகன தரிப்பிட வசதிகளும் அலுவக இடவசதியும், மண்டபமும் ஏனைய மாடிகளில் பொது இடங்களும் அமைந்திருக்கும் இந்தகட்டிடம் சிறந்த காற்றோட்ட வசதிகள் உள்ளதாகவும், உயர்ந்த அளவில் மழைநீரைச்  சேகரிக்கும் வசதிகளும் அமையப் பெற்றதாக இருக்கும்.  மேலதிகமாக சக்கரநாற்காலிகள் செல்லும்  வழியும் மலசல கூடங்களும் அங்கவீனர்களுக்கான ஏனைய வசதிகளும் வழங்கப்படவுள்ளது.

இந்தத்திட்டத்திற்கு செலவாகும் ரூபா 3 பில்லியன்களையும் நகர முதலீட்டு அபிவிருத்திக் கொம்பனி பிறைவேட் (யூ.டீ.ஏ) மானித்தைக்கையாளுகின்றது.  இத்திட்டத்தின் முகாமையாளயராக கட்டிடக்கலை ஆலோசகர் கலாநிதி.எம்.ஈ.ஜோக்கிம், கடைமையாற்றுகிறார் மத்திய உசாதுணைபணியகம் இத்திட்டத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்டமுகாமைத்துவ பிரிவுக்கும் தொழில்நுட்ப ஆலோசனைப் பிரிவுக்கும் அறிவுரை வழங்குகின்றது.  இந்த மேல் கட்டடத் தொகுதி பூர்த்தியடைவதற்கு இரு வருடங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த வேலையை மஹா என்ஜினியரிங் பிறைவேட் லிமிடட் நடைமுறையாக்கிக்கொண்டிருக்கிறது.