முகப்பு

எம்பெக்கே தேவாலயம்

உடுநுவர பிரதேச செயலாளர் பிரிவில் இது அமைந்துள்ளது. இலங்கை கட்டிடக்கலையின் மிக விசேடமான இந்த எம்பெக்கே தேவாலயம் கம்பளை யுகத்தில் நிர்மானித்துள்ளதாக குறிப்பிடுகின்றது. இதைப் பற்றி "எம்பெக்கே வர்ணனாவ" எனும் நூலில் குறிப்பிடுகின்றது. III வது விக்கிரமபாகு அரசனுடைய ராணியாரான ஹெனகந்த பிசோ பண்டாரவும் ரங்வல எனும் ஊரின் ஒரு மேளக்காரனும் சேர்ந்து இவ்விடத்தில் மூன்று மாடி தேவாலயம் செய்ததாக குறிப்பிடுகின்றது. ஆனால் அதன் எந்த பகுதியும் இன்று இங்கு காணக் கிடைக்காவிட்டாலும் மிக விசேஷமாக சிற்ப வேலைகள் செய்த மரத் தூண்களின் மேல் குறுக்கு தீராந்திகள் போட்டு சிற்ப வேலைகள் செய்த நீண்ட மண்டபமும் தேவாலயமும் காணக் கிடைக்கின்றது. இது ராஜாதி ராஜசிங்ஹ காலத்தில் செய்யப்பட்டதாகும்.

வெள்ளிக்கிழமை, 03 ஆகஸ்ட் 2012 05:10 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது