Ministry of Urban Development and Sacred Area Development

Sinhala (Sri Lanka)English (United Kingdom)

பிரதான பட்டியல்

நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முன்பக்கம் சமாச்சாரம் பிரதம மந்திரி சாஞ்சியில் யாத்திரிகர் விடுதியை திறந்துவைக்கிறார்

பிரதம மந்திரி சாஞ்சியில் யாத்திரிகர் விடுதியை திறந்துவைக்கிறார்

நகர அபிவிருத்தி, புனித நிலப்பகுதிகள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில், இந்தியா, போபாலிலுள்ள சாஞ்சி புனிதபூமியில் சாஞ்சி வந்தனா நிகேதனத்தை பிரதம மந்திரி, கௌரவ ரத்னசிறி விக்ரமநாயக்க 2009, ஒக்டோபர் 31ஆம் திகதியன்று திறந்து வைத்தார். மூன்று மாடிகளை கொண்ட இந்த யாத்திரிகர் விடுதி, நகர அபிவிருத்தி, புனித நிலப்பகுதிகள் அபிவிருத்தி அமைச்சை சார்ந்த தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் 84 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்களுக்கு பௌத்த தர்மத்தை பரிசளித்த அசோக்க சக்ரவர்த்தி, புராதன இந்தியாவின் 16 ஜனபதங்கள் எனப்படும் குடியேற்றங்களுள் ஒன்றான அவந்தி எனும் பிராந்தியத்திலுள்ள சாஞ்சி சைத்யகிரி புனிதபூமியில் இந்த தர்ம ஸ்தாபனத்துக்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார். இவ்விடத்திலிருந்தே அவரது மகனாகிய வண. மஹிந்த தேரர், தூய பௌத்த சமயத்தை இலங்கைக்கு கொண்டுவரக்கூடியதாக இருந்தது.

நவீன மாநிலமாகிய மத்ய ப்ரதேஷத்தில் போபால் எனும் அபிவிருத்தி குறைவான பிரதேசத்திலுள்ள சாஞ்சிக்கு விஜயம் செய்யும் யாத்ரீகர்கள் பலவிதமான கஷ்டங்களுக்கு முகம் கொடுக்கின்றார்கள். தம்பதீவகத்துக்கான பாரம்பரீய யாத்திரை மார்க்கத்தினின்றும் தொலைவாகவுள்ள இவ்விடத்துக்கு வருகின்ற யாத்ரீகர்களுக்கு வேண்டிய யாத்ரீகர் விடுதிகளோ அன்றி தங்குமிட வசதிகளோ பற்றாக்குறையாக இருப்பதே மிகப்பெரும் குறைப்பாடாகவுள்ளது. சாஞ்சியில் யாத்ரீகர் விடுதி அமைப்பதற்கான திட்டவரைவுகள், மூன்று வருடங்களுக்கு முன்னர் மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் வழிக்காட்டலின் கீழ், நகர அபிவிருத்தி, புனித நிலப்பகுதிகள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களால் வகுக்கப்பட்டன.

நகர அபிவிருத்தி, புனித நிலப்பகுதிகள் அபிவிருத்தி அமைச்சை சார்ந்த தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால், சாஞ்சியில் நிறுவப்பட்டுள்ள மூன்று மாடிகளை கொண்ட யாத்ரீகர் விடுதியாகிய வந்தனா நிகேதனாவில் விக்கிரக மன்றம், உபதேச அறைகள், யாத்ரீகர்களுக்கான படுக்கையறைகள், திறந்த இளைப்பாற்று அறைகள், குளியலறைகள், சமையலறை, சுத்திகரிப்பு வசதிகள் ஆகியவை உள்ளடங்குகின்றன.

இந்திய அரசாங்கம், மத்ய பிரதேஷ் மாநில அரசாங்கம், மத்ய ப்ரதேஷ பொது வேலை திணைக்களம், இக்காணியை நன்கொடையாக வழங்கிய இலங்கை மஹாபோதி சங்கம், சாஞ்சி பிரதம மதகுரு வண. பனகல உபதிஸ்ஸ தேரோ ஆகிய அனைவரும் இம்முயற்சிக்கு பங்களிப்பாற்றியுள்ளனர்.

சாஞ்சி பிரதம மதகுரு பனகல உபதிஸ்ஸ தேரோ, மத்ய ப்ரதேஷ முதலமைச்சர் கௌரவ சிவ்ராஜ் சிங் சௌஹான் அவர்களின் தலைமையிலான இந்திய மக்களின் பிரதிநிதிகள், மகளிர் வலுவூட்டல், சிறுவர் அபிவிருத்தி அமைச்சர் திருமதி. சுமேதா ஜயசேன, நகர அபிவிருத்தி, புனித நிலப்பகுதிகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ப்ரதாப் ராமானுஜம் மற்றும் இலங்கையிலிருந்தும் கடல்கடந்த நாடுகளிலிருந்தும் வருகை தந்திருந்த மதகுருமார்களும் பொதுமக்களும் இவ்வைபவத்தில் பங்குபற்றினர்.