முகப்பு

கலுதிய பொகுன

தம்புலை பிரதேச செயலாளர் பிரிவில் சிகிரியாவிற்கு 8 கி.மீ. தொலைவில் அமைந்த கும்புக்கதன்வல எனுமிடத்தை அண்மித்து இந்த இடம் அமைந்துள்ளது. காட்டுப் பிரதேசத்தில் உள்ள இந்த இடத்தில் 9 ம் நூற்றாணடைச் சேர்ந்த கல்வெட்டின் படி இந்த விகாரை தக்கின கிரி விகாரை என அறிமுகப்படுத்துகின்றது. மகா வம்சத்தின் படி இந்த விகாரை சத்தாதிஸ்ஸ அரசன் (119 – 137) செய்வித்துள்ளார். அக்கபோதி எனும் அரசன் (578 – 612) இதை புனரமைத்து உபோசதாகரை ஒன்று நிர்மானித்துள்ளது. இங்கு அனேக கல்வெட்டுகள் உள்ளதோடு குகைக் கல்வெட்டுகளும் நீர்வடி வெட்டப்பட்ட குகைகள் சிலவற்றும் தாது கோபுரமும் இருக்கின்றது. கற் தூண்களும் பிக்குமார் வதிவிடமும் விகாரையின் சிதைவுகளும் இங்குள்ளது. இதற்கு சிறிது தூரத்தில் கறுத்த நீர் உள்ள குளம் இருப்பதோடு இந்த விகாரை அந்த பெயரில் அறிமுகம் செய்கின்றது.

திங்கட்கிழமை, 02 ஜூலை 2012 03:55 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது