Ministry of Urban Development and Sacred Area Development

Sinhala (Sri Lanka)English (United Kingdom)

பிரதான பட்டியல்

நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முன்பக்கம் பிரிவுகள் நிருவாகம் புனித பிரதேச அபிவிருத்தி

புனித பிரதேச அபிவிருத்தி

நீண்ட காலமாக தேசிய, சுற்றாடல், வரலாறு, பூகோளவியல் கட்டடநிர்மாணக்கலை ஆகியவற்றின் கௌரவத்தைப் பேணிக்காக்கும் வகையில் பக்தர்களுக்கு தேசிய மற்றும் மாகாணமட்டத்தில் முக்கியத்துவம் பெறும் வகையில் ஒரு புனிதப் பிரதேசம் புனித தலமாக வரையறுக்கப்படுகிறது.

பிரிவின் குறிக்கோள்

புனிதப் பிரதேசத்தின் பாதுகாப்பானது, சமய முக்கியத்துவம் வாய்ந்ததும் சரித்திர பெறுமதி மிக்கதுமான இந்த தீவின் பொதுசன உபயோகத்திற்கும் உட்கட்டமைப்பு வசதிகளுடனும் மகிழ்ச்சியுடனும் தரமுயர்ந்த வாழ்க்கைத்தரத்தினையும் அங்கு வாழுகின்ற மக்களுக்கு வழங்கும் நியதியாகும்.

பிரிவின் தொழிற்பாடுகள்

  1. அபிவிருத்திக்காக புனிதப் பிரதேசங்களை அடையாளப்பபடுத்தல்
  2. ஜனநாயக சோசலிஷகுடியரசு இலங்கை அரசங்கத்தில் கசட் வர்த்தமானி மூலம் புனிதப்பிரதேசத்தைப் பிரகடனப்படுத்தல்.
  3. நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்தித் திட்டங்களைத் தயார்படுத்தலும் ஏனைய முகவர்களுடன் இணைந்து நடைமுறைப்படுத்தலும்.
  4. புனிதப்பிரதேச அபிவிருத்தித்திட்டங்களை மாதந்தம் இடைவிடாது கண்காணித்தலும் காலாண்டுக்கான அபிவிருத்தியை மீளாய்வு செய்தலும்.
  5. தொடர்ச்சியான பாராமரிப்புக்காக புனிதப்பிரதேசத்தில் நிறைவுபெற்ற திட்டங்களை சம்பந்தப்பட அதிகாரிகளுக்கு கையளித்தல்.
நிறுவன அமைப்பு

மேலதிக தகவல் தொடர்பு>>

புனிதப்பிரதேச அபிவிருத்தி நிலை

புனிதப்பிரதேச அபிவிருத்தியின் சிறு விபரம்

ஹம்பாந்தோட்ட மாவட்டதிலுள்ள யால வன விலங்கு சரணாலயத்தினுள்ளே சித்துள்பவ்வ ரஜமஹா விஹாரை அல்லது சித்தள பப்பத விஹாரை அமைந்துள்ளது. முன்னர் ஏறக்குறைய பன்னிரண்டாயிரம் அறஹத் பிக்குகளுக்கான மடாலயமாக விளங்கிய இவ்விஹாரை கவந்திஸ்ஸ மன்னனால் புனரமைக்கப்பட்டது. இடி பாடுகள் பலவற்றை இப்பிரதேசத்தில் காணலாம்.


மாத்தளையிலிருந்து தம்புள்ளைக்கு செல்லும் கண்டி வீதியின் மருங்கில் அலுவிஹாரை அமைந்துள்ளது. கி.மு. 3ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இவ்விஹாரை முன்னர் "அலோக்க லேனா" அல்லது "அலு லேனா" என அழைக்கப்பட்டது. வலகம்பா மன்னனின் ஆட்சிக்காலத்தில், அலுவிஹாரையில் திரிப்பிக்காய எனும் நூல் தொகுக்கப்பட்டது.


கொழும்பு மாவட்டத்திலுள்ள ஜல்த்தற எனுமிடத்தில் அம்புல்கம ரஜமஹா விஹாரை அமைந்துள்ளது. வரலாற்று ரீதியில், முற்கால அறஹத் பிக்குமார் பலருக்கு புகழ்பெற்றதொரு மடாலயமாக விளங்கியது. இது இலங்கை மக்கள் அனைவரினதும் பெருமதிப்பை பெற்றிருப்பதுடன் 32 புனித அரச மரக்கன்றுகளில் ஒன்று இங்கு நாட்டப்பட்டது. இப்பிரதேசத்தில் இடிபாடுகள் பல ஞாபகச்சின்னங்களாக காணக்கிடைக்கின்றன.


கம்பஹா மாவட்டத்தில் சமய, வரலாற்று ரீதியில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது அத்தனகல ரஜமஹா விஹாரையாகும். சிறிசங்கபோ மன்னனுடனான தொடர்பை கல்வெட்டு வெளிப்படுத்துகிறது. போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட அத்தனகல ரஜமஹா விஹாரை காடுபற்றி போனது. இப்புனித பூனித பூமியின் வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் ஞாபகச்சின்னங்கள் பலவுண்டு. சிறிசங்கபோ மன்னன் பிரயாணிக்கு தனது தலையை அர்ப்பணித்த செய்த இடத்தில் தோண்டப்பட்டுள்ள சிறுகுளம், புராதன போதிமரம், தம்பதெனி டகபா, கதிர்காமக்கடவுள், சமன், பத்தினி, நாதா ஆகியோருக்குரிய தேவாலயங்கள் ஏனைய முக்கியமான இடங்களாகும்.கல்லாலான புத்தர் சிலைக்காக அவுக்கண ரஜமஹா விஹாரை உலகப்புகழ் பெற்றது. கலா வாபீ விஹாரை, கலா கல் விஹாரை, கலா குலு விஹாரை ஆகிய பெயர்களாலும் அழைக்கப்பட்ட இவ்விஹாரை கி.மு.5ஆம் நூற்றாண்டில் தாத்துசேன மன்னனால் கட்டப்பட்டது.கொழும்பு மாவட்டத்திலுள்ள பெலன்வில எனும் இடத்தில் பெலன்வில ரஜமஹா விஹாரை அமைந்துள்ளது. இங்குள்ள அரசமரம் கி.மு. 247-207 ஆண்டு காலப்பகுதியில் தேவநம்பியதிஸ்ஸ மன்னனின் ஆட்சிக்காலத்தில் நாட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. காடுபற்றி போயிருந்த இந்த விஹாரை 1850ஆம் ஆண்டு கோன்கொடகெதற தேரோவினால் புனரமைக்கப்பட்டது. புராதன காலங்களில், இது பெலன்வில மஹாபோதி ரஜராமய அல்லது பெலன்வில போதி சமீப விஹாரை என பெயரிடப்பட்டது.


ரத்னபுரி மாவட்டத்தின் குறுவிட்ட, தெல்கமுவ எனும் இடத்தில் தெல்கமுவ ரஜமஹா விஹாரை அமைந்துள்ளது. முற்காலத்தில் இவ்விஹாரை 'சப்பறகமு விஹாரை', 'லாபுஜகம விஹாரை' ஆகிய பெயர்களால் அறியப்பட்டது. இந்த விஹாரையிலுள்ள புனித தந்த தாது பல நூற்றாண்டுகளாக மன்னர்களால் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளதாக நம்பப்படுகிறது.


கண்டி மாவட்டத்தின் அஸ்கிரிய எனும் இடத்தில் இவ்விஹாரை அமைந்துள்ளது. புனித தந்த தாதுவிற்கு மதிப்பளிக்கும் முகமாக கண்டியில் நடைபெறும் எசல பெரஹரவின் கடைசி நாள் கெடிகே விஹாரையிலிருந்தே ஆரம்பமாகும். இந்த
விஹாரையின் கட்டிட அமைப்பு தென்னிந்திய விஜய நகர பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுகிறது.
கெடிகே விஹாரையானது 'சந்த்ரவதி விஹாரை' அல்லது 'தலதா கமன் மாளிகா விஹாரை' ஆகிய பெயர்களினால் அறியப்பட்டிருந்தாக கல்வெட்டு வெளிப்படுத்துகிறது. மூன்றாவது விக்ரமபாகு மன்னன் தனது குருவாகிய தம்மகீர்த்தி தேரோவுக்கு பரிசளிப்பதற்காக (கி.மு.1358-கி.மு.1374) இந்த விஹாரையை கட்டினான். முதலாவது விமலதர்ம சூரிய மன்னன், டொனா கத்தரீனா, கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னன் ஆகியோரது ஈமக்கிரியைகள் இவ்விடத்திலேயே நடைபெற்றனகண்டி மாவட்டத்தின் அஸ்கிரிய எனும் இடத்தில் இவ்விஹாரை அமைந்துள்ளது. புனித தந்த தாதுவிற்கு மதிப்பளிக்கும் முகமாக கண்டியில் நடைபெறும் எசல பெரஹரவின் கடைசி நாள் கெடிகே விஹாரையிலிருந்தே ஆரம்பமாகும். இந்த
விஹாரையின் கட்டிட அமைப்பு தென்னிந்திய விஜய நகர பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுகிறது.
கெடிகே விஹாரையானது 'சந்த்ரவதி விஹாரை' அல்லது 'தலதா கமன் மாளிகா விஹாரை' ஆகிய பெயர்களினால் அறியப்பட்டிருந்தாக கல்வெட்டு வெளிப்படுத்துகிறது. மூன்றாவது விக்ரமபாகு மன்னன் தனது குருவாகிய தம்மகீர்த்தி தேரோவுக்கு பரிசளிப்பதற்காக (கி.மு.1358-கி.மு.1374) இந்த விஹாரையை கட்டினான். முதலாவது விமலதர்ம சூரிய மன்னன், டொனா கத்தரீனா, கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னன் ஆகியோரது ஈமக்கிரியைகள் இவ்விடத்திலேயே நடைபெற்றன
கண்டி மாவட்டத்தின் அஸ்கிரிய எனும் இடத்தில் இவ்விஹாரை அமைந்துள்ளது. புனித தந்த தாதுவிற்கு மதிப்பளிக்கும் முகமாக கண்டியில் நடைபெறும் எசல பெரஹரவின் கடைசி நாள் கெடிகே விஹாரையிலிருந்தே ஆரம்பமாகும். இந்த
விஹாரையின் கட்டிட அமைப்பு தென்னிந்திய விஜய நகர பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுகிறது.
கெடிகே விஹாரையானது 'சந்த்ரவதி விஹாரை' அல்லது 'தலதா கமன் மாளிகா விஹாரை' ஆகிய பெயர்களினால் அறியப்பட்டிருந்தாக கல்வெட்டு வெளிப்படுத்துகிறது. மூன்றாவது விக்ரமபாகு மன்னன் தனது குருவாகிய தம்மகீர்த்தி தேரோவுக்கு பரிசளிப்பதற்காக (கி.மு.1358-கி.மு.1374) இந்த விஹாரையை கட்டினான். முதலாவது விமலதர்ம சூரிய மன்னன், டொனா கத்தரீனா, கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னன் ஆகியோரது ஈமக்கிரியைகள் இவ்விடத்திலேயே நடைபெற்றனபதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள மாளிகாத்தென்ன ரஜமஹா விஹாரையானது, புத்தபகவான் ஞானம் பெற்ற ஒன்பது மாதங்களின் பின்னர், முதன்முதலில் இலங்கைக்கு விஜயம் செய்த இடமாகையால், இலங்கையிலுள்ள பௌத்தர்கள் அனைவரினதும் பெருமதிப்பை பெற்றிருக்கிறது. ஸ்ரீ மஹா போதியிலிருந்து கொண்டுவரப்பட்ட முப்பத்திரண்டு அரசமர கன்றுக்களில் ஒன்று மாளிகாத்தென்ன ரஜமஹா விஹாரையில் நாட்டப்பட்டுள்ளதாக போதிவம்ச மூலம் தெரியவருகிறது.


மொனராகல மாவட்டத்திலுள்ள புத்தல எனும் இடத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் மாளிகாவில ரஜமஹா விஹாரை அமைந்துள்ளது. முன்பு இந்த விஹாரை ஆரியக்கார விஹாரை, ஆரிக்கோட் விஹாரை, ஆரிக்காரி, ஆரியக்கார ஆகிய பெயர்களால் அறியப்பட்டது. மாளிகாவில புத்தர் சிலைகளே இவ்விஹாரையிலுள்ள முக்கியமான தொல்பொருள் எச்சங்கள் ஆகும். அக்ரபோதி மன்னனால் (கி.மு. 564-598) கட்டப்பட்ட இந்த புகழ்பெற்ற மாளிகாவில புத்தர் சிலையானது ஆசியாவிலேயே உயரமான புத்தர் சிலையாகும்.ஹம்பாந்தோட்ட மாவட்டத்திலுள்ள மலை ஒன்றின் உச்சியிலுள்ள கிருவாப்பற்று எனும் இடத்தில் மூல்கிரிகல ரஜமஹா விஹாரை அமைந்துள்ளது. தேவநம்பியதிஸ்ஸ மன்னனால் கட்டப்பட்ட இவ்வாலயம் பின்னர் காடுபற்றி போனவிடத்து கவந்திஸ்ஸ மன்னன், துட்டுகெமுனு மற்றும் ஏனையோர் பலரும் இதனை புனரமைத்துள்ளனர். இவ்விஹாரையில் 25 குகைகள் காணப்படுவதுடன், கீழ்நாட்டு துறவிகளின் மூல்கிரிகல பரம்பரைக்குரிய ஒரு மையமாகவும் இது விளங்கியது. மூல்கிரிகல ரஜமஹா விஹாரை அதன் சுண்ணாம்பு சித்திரங்களுக்கு பிரசித்தி வாய்ந்தது. புராதன காலங்களில் மாந்திரீகத்துக்கு பெயர்பெற்றது இவ்விஹாரை.


கம்பஹா மாவட்டத்திலுள்ள ஞாபாகார்த்த எச்சமாகிய ஒரு மலையில் அமைந்துள்ள ரஜமஹா விஹாரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த புனித ஸ்தலமாகும். கி.மு. 3ஆம்- 1ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் அகிபுத்தா என்பவர் 99 குகைகளை கொண்ட இவ்வாலயத்தை புத்த துறவிகளுக்கு வழங்கினார். ஆகக்கூடிய குகைகளை கொண்டதென பதிவுசெய்யப்பட்டுள்ள ஆலயம் பிலிக்குத்துவ ரஜமஹா விஹாரையாகும். டச்சு கட்டிடக்கலையுடன் மரத்தினால் அமைக்கப்பட்டுள்ள பாலமும் இவ்வாலயத்தின் இன்னொரு விசேஷ அம்சமாகும்.


றெஸ் விஹாரை அல்லது செஸ் விஹாரை குருநாகல மாவட்டத்தில் அமைந்துள்ளது. 32 புனித அரச மரக்கன்றுகளில் ஒன்று இங்கு காணப்படுகிறது. இவ்வரசமரக்கன்றை நடும்போது இப்பிரதேசம் முழுவதும் ஒளிக்கதிர்கள் பரவியிருந்தன. ஆகையினால் தேவநம்பியதிஸ்ஸ மன்னனால் கட்டப்பட்ட இவ்விஹாரை றெஸ் விஹாரை என பெயரிடப்பட்டது.இந்தியாவிலுள்ள போபால் எனப்படும் மாகாணத்தில் அமைந்துள்ள சாஞ்சி ஸ்தூபி, கி.மு. 3ஆம் நூற்றாண்டில் தர்ம அஷோக்க மன்னனால் கட்டப்பட்ட பௌத்த மடாலயம் ஆகும். மிஹிந்தலையின் தள அமைப்புடனும் கட்டிடக்கலையுடனும் இது நெருங்கிய ஒற்றுமையை கொண்டுள்ளது. யுனெஸ்கோவுடன் இணைந்துள்ள அமைப்பாகிய ஞாபகார்த்த சின்னங்களையும் ஸ்தலங்களையும் பாதுகாக்கும் சர்வதேச கழகம் (ஐ.சீ.ஓ.எம்.ஏ.எஸ்) அதிசிறந்த முறையில் பேணிப்பாதுகாக்கப்பட்டுவரும் சாஞ்சி பௌத்த மடாலயத்தை உலகிற்கே பொதுவான பண்பாட்டு ஸ்தலமாக பிரகடனப்படுத்தியுள்ளது.


சேருவில ரஜமஹா விஹாரையின் தூபியினுள் பத்திரப்படுத்தியுள்ள புத்த பகவானின் முன்நெற்றி எலும்பு (லலதா தாது) காரணமாக இந்நாட்டில் இன்றுவரை மிகவும் போற்றப்படும் பௌத்த ஆலயம் இதுவாகும். அதிகளவில் வணங்கப்படும் ஆலயங்களிடையே சேருவில மிகவும் பழைமை வாய்ந்தது. வரலாற்றில் பின்னோக்கிச்சென்றால் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் கலந்திஸ்ஸ மன்னனால் கட்டப்பட்ட இவ்வாலயம், அதிபுனிதம் வாய்ந்த 16 பௌத்த ஆலயங்களுள் (சொலோஸ் மஸ்தானா) ஒன்றாகவும் விளங்குகிறது. சமய மற்றும் கலாச்சர முக்கியத்துவம் வாய்ந்த சேருவில ஆலயம், காலத்துக்கு காலம் ஏற்பட்ட உட்பூசல்களில் பாதிக்கப்படவில்லை. காடுபற்றி போயிருந்த 1000 ஏக்கர் காணியை கொண்ட இந்த ஆலயம் 1922ஆம் ஆண்டு வண. தம்பகசாரே ஸ்ரீ சுமேதங்கர தேரோவினால் புனருத்தாரணம் செய்யப்பட்டது.முற்காலத்தில் சித்துள்பவ்வா விஹாரையானது 'சித்தள பபத அல்லது கினல் பவத விஹாரை' எனும் பெயர்களால் அறியப்பட்டதென வரலாற்று கல்வெட்டிலிருந்து தெரியவருகிறது. யால சரணாலயத்தில் அமைதியும் சாந்தமும் தவழும் ஓரிடத்தில் அமைந்துள்ள இது, ஏறக்குறைய பன்னீராயிரம் பிக்குமார்களுக்கான மடாலயமாக கவந்திஸ்ஸ மன்னனால் (கி.மு.290- 164) கட்டப்பட்டது. கனிஷ்க திஸ்ஸ மன்னன் இந்த விஹாரையை சுற்றி திஸ்ஸவாவியை கட்டினான். இப்பிரதேசத்தில் கட்டிடங்கள், சிற்பங்களின் எச்சங்கள் பலவற்றை காணக்கூடியதாக உள்ளது.இலங்கையிலுள்ள உண்மையான பெளத்தர்களால் மிகுந்த மரியதையுடன் போற்றப்படும் ஆலயங்களுள் சோமாவதி சைத்தயமும் ஒன்றாகும். ஏனெனில் புத்தபகவானின் புனித தந்த தாது ஒன்று அங்குள்ளது. இது ஏறக்குறைய 2100 ஆண்டுக்கால வரலாற்றை கொண்டது. ஞாபகச்சின்னங்கள், சிற்ப வேலைப்பாடுகளின் இடிபாடுகள் பலவற்றை இப்பிரதேசத்தில் காணக்கூடியதாக உள்ளது.புத்த பகவானின் மூன்றாவது இலங்கை விஜயத்தி்ன் போது அவர் ஸ்ரீபாதவுக்கு விஜயம் செய்தகர். சமனலகிர, சமன்கூடம், சமனலகந்த, சுமண கூடம், ஆதாமின் கோபுரம் ஆகிய பெயர்களால் அழைக்கப்படும் இம்மலையுச்சியில் புத்தபகவான் தனது பாதச்சுவட்டை பதித்துவிட்டு சென்றார். கூம்பு வடிவத்தை கொண்ட ஸ்ரீபாத மலையானது மலைத்தொடர்களின் கூட்டம் ஒன்றினுள்ளே அமைந்துள்ளது. கல்வெட்டுகளின் படி, சமன் பகவானே இப்புனித தலத்திற்கு பொறுப்பானவர். உந்துவப் பூரணை தொடக்கத்தில், மில்லியன் கணக்கான வண்ணத்துப்பூச்சிகள் ஸ்ரீபாத மலையை நோக்கி கிளம்புகின்றன.கண்டியில் அமைந்துள்ள மூன்றாவது விக்ரமபாகு மன்னனால் கட்டப்பட்ட புனித தந்த தாது ஆலயம், உலக பாரம்பரிய சொத்தாகும். எழிலும் வளமும் பொருந்தியதால், அது சென்கடகலபுர அல்லது ஸ்ரீவர்தானபுர என பெயரிடப்பட்டது. தலதா வீடு எனப்படும் புனித தந்ததாது ஆலயம் முதலாவது விமலதர்மசூரிய மன்னனால் கட்டப்பட்டதெனினும் பத்திரிப்பும் அழகிய கண்டி ஏரியும் ஸ்ரீவிக்ரம ராஜசிங்க மன்னனால் கட்டப்பட்டவையாகும்.
வருடாந்த கண்டி ஊர்வலம் அல்லது கண்டியின் எசல பெரஹெரா என்பது கண்கொள்ளா கலாச்சார நிகழ்வாகும். அது 'கப் சித்துவீம' எனும் நிகழ்வுடன் தொடங்கி 'நீர் வெட்டு' எனும் நிகழ்வுடன் நிறைவடைகிறது. முக்கியமாக மன்னன் மீதும் மக்கள் மீதும் ஆசீர்வாதங்களை வெளிக்கொணரும் பொருட்டு இவ்வைபவம் நடாத்தப்படுகிறது.
அனுராதபுர மாவட்டத்திலுள்ள விலாச்சிய எனும் இடத்தில் 250 ஏக்கர் பரப்பளவான சரணாலயம் ஒன்றினுள் தத்திரிமலை ரஜமஹா விஹாரை அமைந்துள்ளது. சமனேர பிக்குமார்களுக்காக இவ்வாலயத்தினால் நடாத்தப்படும் பயிற்சிக்கல்வி மையம் ஒன்று இங்குள்ளது. இப்பிரதேசத்தினுள் 'திவக்கா' எனப்படும் ப்ராமணர்களுக்கான கிராமம் ஒன்று அமைந்திருந்ததென வரலாறு கூறுகிறது. அரசமரம், புத்தர் சிலை, முற்கால மன்னர்களால் கட்டப்பட்ட பிக்குமார் தங்குமடம் ஆகியவற்றை இன்றும் இவ்விஹாரையின் உட்புறத்தில் காணக்கூடியதாக உள்ளது.


ஏறத்தாழ பன்னீராயிரம் துறவிகளுக்கென கி.மு. 2ஆம் நூற்றாண்டில் கவந்திஸ்ஸ மன்னனால் கட்டப்பட்டது திஸ்ஸமஹாராமய. இது றுஹூணு பிரதேசத்தின் பௌத்த கலாச்சரத்துக்கும் பௌத்த சமயத்துக்கும் உகந்த மையமாக விளங்குகிறது. கட்டிடத்தை சூழ பெருந்தொகையான தொல்பொருள் இடிபாடுகள் காணப்படுகின்றன.


கம்பஹா மாவட்டத்திலுள்ள அத்தனகல எனும் இடத்தில் வாரண ரஜமஹா விஹாரை அமைந்துள்ளது. இப்புராதன விஹாரையும் போதி மரமும் "உட புதுகே" என்றழைக்கப்படும் புனித மலையின் உச்சியில் உள்ளன.


துறவிகளது பௌத்த ஞானத்தை மேம்படுத்துவதில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் வித்யாலங்கார பிரிவேனவும் ஒன்றாகும். தர்ம பாடசாலை, விருந்தினராக வருகைதரும் துறவிகளுக்கான தங்குமிடம், பக்தர்களுக்கான ஆலயம் ஆகிய துறைகளில் சேவைகள் நடைபெறுகின்றன. இது பௌத்த கல்வி மையத்தின் ஆரம்பகர்த்தாக்களுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது. திரிபிடகம் ஓதுவதற்காக பௌத்த பக்திமான் ஒருவரால் இப்பிரிவேனவுக்கான காணி அன்பளிப்பு செய்யப்பட்டது.


குருநாகல மாவட்டத்தில் மஹாவ எனுமிடத்தில் அமைந்துள்ளது யாப்பஹுவ ரஜமஹா விஹாரை. புராதன ராஜ்யமும் ரஜமஹா விஹாரையும் கலையம்சமுள்ள கட்டிட நுட்பம் மிக்க மதிலால் சூழப்பட்டிருந்தன. புராதன விஹாரையும் போதி மரமும் அதிமுக்கியமான இடங்களாகும். தந்ததாது வைக்கப்பட்டுள்ள ஆலயத்தின் நுழைவாயிலில் காணப்படும் வாஹல்கட எனும் பகுதி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கிறது. இப்பிரதேசத்தில் விஹாரை ஒன்றினதும் டகபா மற்றும் தொல்பொருள் பெறுமதி வாய்ந்த ஏனைய கட்டிடங்களினதும் இடிபாடுகள் காணப்படுகின்றன. கி.மு.1214-1235 காலப்பகுதியில் நாட்டை கைப்பற்ற வருபவர்களை தாக்குவதற்கு 'சுப்பா' என்று அழைக்கப்பட்ட படைத்தளபதியால் பயன்படுத்தப்பட்டது புகழ்மிக்க இந்த யாப்பஹுவ மலைப்பாறை கோட்டையாகும்.

Attanagalle Raja Maha Viharaya is the most important religious and historical sacred place in Gampaha district.Legend reveals a realtionship with King Sirisangabo. Attangalle Raja Maha Vihara was destroyed by Portuguese and went wilderness.

There are many monuments depicting the historical importance of this sacred place. Pond made at the place where King Sirisangabo offered his head to the passenger, Ancient Bo tree, Dambadeni Dagaba and the Devalas for God Kataragama, Saman, Paththini and Natha are other important places