Ministry of Urban Development and Sacred Area Development

Sinhala (Sri Lanka)English (United Kingdom)

பிரதான பட்டியல்

நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முன்பக்கம் அமைச்சர்கள் கௌரவ ரொஸன திசானயக வாழ்க்கைச்சரிதம்

வாழ்க்கைச்சரிதம்

நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ றோஹண திஸாநாயக்க அவர்கள் 1958 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி பிறந்தார்.  வியாபாரத்தை தொழிலாக கொண்ட அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினூடாக(எஸ்.எல்.எவ்.பீ) அரசியலில் பிரவேசித்தார்.  1991 ஆம் ஆண்டு அவர் மாத்தளை மாநகர சபைக்கு தெரிவாகியதுடன் அச்சபையில் எதிர்க்கட்சித்தலைவராக பதவி வகித்தார்.  1997 இல் மக்கள் முன்னணியூடாக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட அவர், மாத்தளை நகரபிதாவாக பதவி வகித்தார்.  2001ஆம் ஆண்டில் அவர் மாத்தளை மாவட்டத்திற்கான ஸ்ரீ.ல.சு.க. இன பிரதம அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

அவர் 2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்டு, மாத்தளை மாவட்டத்துக்கான நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.  அன்றுதொட்டு இப்பதவியில் அவர் இருந்து வருகிறார்.  அதே வருடம், சமுர்தி அலுவல்கள் பிரதியமைச்சராகவும் நியமனம் செய்யப்பட்டார்.  2005 இல் அவர் நகரஅபிவிருத்தி, நீர் வழங்கல் பிரதியமைச்சராகவும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சராவும் நியமிக்கப்பட்டார்.

2007ஆம் ஆண்டு அவர் நகர அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அரசியல் பணிக்கு மேலதிகமாக, தனது சொந்த மாவட்டத்துடன் கூடவே நாடு முழுவதிலும், கௌரவ  அமைச்சர் அவர்கள் தனித்துவமான சமூகப்பணி ஒன்றையும் ஆற்றிவந்துள்ளார்.  அவர் இலங்கை டேபிள் டென்னிஸ் சங்கத்தின் தலைவராகவும் (இலங்கையில் "ஹொக்கி விளையாட்டின் தொட்டில்" என அழைக்கப்படும்) மாத்தளை மாவட்ட ஹொக்கி சங்கத்தின் தலைவராகவும் மாத்தளை துடுப்பாட்ட சங்கத்தின் தலைவராகவும் பதவி வகிக்கிறார்.  அத்துடன் உலக பௌத்த இளைஞர் சங்கத்தின் பொதுமக்கள் சார்பான தலைவராகவும் அவர் விளங்குகிறார்.