அறிமுகம்
நகர அபிவிருத்தி, புனித பிரதேச அபிவிருத்தி அமைச்சின் கிராமிய நீர் வழங்கல், சுத்திகரிப்பு பிரிவு (ஆர்.டப்ளியூ.எஸ்.எஸ்.டீ) என்பது இலங்கையின் கிராமிய நீர்வழங்கலுக்கும் சுத்திகரிப்புத்துறையின் அபிவிருத்திக்கும் பொறுப்பாகவுள்ள தேசிய முகவர் நிறுவனமாகும். தற்போது இலங்கையிலுள்ள 13 மாவட்டங்களில் பாரிய சமுதாய நீர்வழங்கல், சுத்திகரிப்பு கருத்திட்டங்கள் இரண்டை உலகவங்கி, ஜப்பானிய சர்வதேச கூட்டுறவு வங்கி (ஜே.பி.ஐ.சீ) இலங்கை அரசாங்கம் (ஜீ.ஓ.எஸ்.எல்) மற்றும் கூட்டாக பயனடையும் சமுதாயங்களிலிருந்து கிடைக்கப்பெறும் நிதியுதவிகளை கொண்டு அமுலாக்கம் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது. தூய்மையான குடிநீர், அடிப்படை சுத்தம், சுகாதாரக்கல்வி, சுற்றாடல் வேலைத்திட்டங்கள் போன்றவற்றை ஒன்று சேர்ப்பதன் மூலமும் சமுதாயத்தின் நடவடிக்கைகளை சமூக - பொருளாதார, கலாச்சார துறை நோக்கி பரம்பலடைய செய்வதன் மூலமும் குறிக்கப்பட்ட இலக்குகளை அடையக்கூடிய வகையில் கருத்திட்டங்கள் வரையப்பட்டுள்ளன. இவ்வாறான ஒன்று சேர்க்கும் அணுகுமுறையானது, சமுதாய நீர் வழங்கல், சுத்திகரிப்பு கருத்திட்டம் - i (சீ.டப்ளியூ.எஸ்.எஸ்.பீ - i) இனை அமுல் படுத்திய காலப்பகுதியில், உச்சளவு வெற்றியளிக்கக்கூடியது என பரிசோதித்து நிருபிக்கப்பட்டுள்ளது. உலகம் பூராவும் வரையப்பட்டுள்ள இதுபோன்ற 200 கருத்திட்டங்களிடையே இந்த வெள்ளோட்ட கருத்திட்டத்தை அதிசிறந்த நடைமுறை எனவும் நல்லமுறையில் நிருவாகிக்கப்படும் கருத்திட்டம் எனவும் உலகவங்கி கணிப்பிட்டுள்ளது. சீ.டப்ளியூ.எஸ்.எஸ்.பீ ஊடாக பரிசோதிக்கப்பெற்ற இப்புதுமையான அணுகுமுறையின் அடிப்படையில், கராமிய நீர் வழங்கல், சுத்திகரிப்பு துறைக்கான தேசிய கொள்கை ஒன்று வகுக்கப்பட்டு தற்போது நாடு முழுவதிலும் அமுலாக்கப்பட்டுவருகிறது.
இலக்குகள்
தீங்கற்ற குடிநீர், போதிய சுத்திகரிப்பு வசதிகள், சகாதார நடைமுறைகள், சுற்றாடல் பாதுகாப்பு போன்றவற்றை வழங்குதல் ஊடகவும் பொருளாதார சமூக, சமய, கலாச்சார நடவடிக்கைகளை முன்னேற்றுவதன் மூலமும் கராமிய, தோப்பகுதி மக்களின் வறுமை குறைப்பதுடன் அவர்களது வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல்
அணுகுமுறையும் உபாயமும்
சமுதாயமக்கள் ஒன்றுதிரட்டும் செயன்முறை ஊடாக கிராமிய மக்களிடையே உள்ளுறையும் சக்தியை வெளிக்கொணர்வதுடன் தமைத்துவத்தை ஏற்கத்தக்கவாறு அவர்களது மனோநிலையை மாற்றுகின்றதுமான கூட்டு சமுதாய அபிவிருத்தி அணுகுமுறைக்கு முழுமையான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் தமது குறிக்கோள்களை எய்தும் பொருட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு சமுதாயம் சார்ந்த நிறுவனங்களாக உருவாக்கப்படுகிறார்கள்.
மக்களே தமது தேவைகளை இனங்கண்டு, நீர்வழங்கள் உபாயத்திட்டங்களை தீட்டி அவற்றை நிர்மாணிக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கின்றனர். விழிப்புணர்வுட்டல் பயிற்சி என்பவற்றினூடாக, அவர்கள் தங்கியிருப்பதற்கு மாநாக சுய நம்பிக்கையை கட்டியெழுப்புகின்றனர்.