Ministry of Urban Development and Sacred Area Development

Sinhala (Sri Lanka)English (United Kingdom)

பிரதான பட்டியல்

நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முன்பக்கம் நகர்ப்புற வீட்டுவசதி

நகர்ப்புற குடியிருப்பு

நகர்ப்புற குடியிருப்பு
கடந்த சில தசாப்த காலமாக திட்மிடப்படாத நகர மயமாக்கலின் காரணமாக, நகர்ப்புற பகுதியில் குறிப்பாக கொழும்பு பிரதான நகருக்குரிய பிரதேசத்தில் கிழான தரமுடைய குடியிருப்புக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் அடிமட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.  சிறந்த வேலை வாய்ப்புக்களையும் சேவைக்கான சந்தர்ப்பங்களையும் கருத்திற் கொண்டு கிராமப்புற மக்கள் ஆற்றுப்பாய்ச்சல் போல நகரை நோக்கி வருவதனால் சேரிகளினதும் குடிசை விடுகளினதும் அபரிதமான பெருக்கம் ஏற்படுகிறது.

நகர அபிவிருத்தி மற்றும் புனிதப்பிரதேச அபிவிருத்தி அமைச்சு நகர ஏழை மக்களின் சமூக பிரச்சனைகளையும் சுற்றாடல் குறைபாடுகளையும் இனம்கண்டு நகர குடியிருப்புக்களின் அபிவிருத்தியில் பங்குதார்களாக தலையிட்டு சிறந்ததோர் சமுதாயத்தை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.  இச்செயற்பாட்டின் மூலம் திடகாத்திரமான, இன்பகரமானதும் நட்புறவுக்கான சூழலை உருவாக்கும் மனித குடியிருப்புக்கான அமைச்சு எதிர்பார்க்கின்றது.

சேரிகளையும் குடிசை வீடுகளையும் நிலைத்திருக்கக்கூடிய சொந்த வீட்டுத்திட்டத்தினால் ஏழைழ வீட்டு குடியிருப்புகளாக மாற்றீடு செய்வதன் மூலம் அமைச்சு ஏழைகளுக்கு புகலிடம் வழங்க முனைப்புடன் செயற்படுகின்றது.  உயர்மட்டவருமானம் பெறுகின்றவர்களின் வர்த்தக வீட்டு அபிவிருத்தித்திட்டத்தின் வரிப்பணம் மூலமே இரு சாராருக்கும் .......  பயக்கும் விதத்தில் இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

நிலைத்திருக்கக்கூடிய பொது குடியிருப்பு நிகழ்ச்சி
அரசாங்த்திற்கு தேவையான மானியத்தையும், நிதிப்பளுவையும் இலகுவாக்கிக் கொள்ளும் வகையில் சந்தை நடைமுறையில் உள்ள இயந்திர அமைப்பு வேலை செய்யும் முறையையும் தனியார் நிறுவனங்கள் தமது குறிக்ககோளை அடைவதற்கும் ஏற்றதாக நடைமுறைப்படுத்த நிலைத்திருக்கக்கூடிய பொது குடியிருப்பு நிகழ்ச்சி வடிமைக்கப்பட்டுள்ளது.  இந்நிகழ்ச்சி வறிய சமூகங்களுக்கும் சிறு சிறு காணித்துண்டுகளாக காணிகளை குடியிருப்புகளாக்கிக் கொண்ட ஏழைகளுக்கும் ஒருங்கிணைப்பதற்கும் மீள் அபிவிருத்தி செய்வதற்கும் தனியார் முதலீடு பயன்படுத்தப்படுகின்றது.  எதிர்கால நடைமுறைப்படுத்துவதற்கு, சேரிகளும் சிறு குடிசைகளும் அகற்றப்படுவதன் மூலம் நகர திட்ட மிடலாளர்களுக்கு உதவி கிடைக்கின்றது.


றியல் எஸ்டேட் (நாணய) மற்று (பிறைவேட்) லிமிடட் (REEL) நிறுவனம் இச்செயற்பாட்டின் முழு நடவடிக்கைக்கும் பொறுப்பாக அமைகின்றது.

குசும் நிவாச (குசும் வீட்டுத்திட்டம்)
அருணோதய குசும் வீட்டுத்திட்டம், நகர அபிவிருத்தி, புனிதப்பிரதேச அபிவிருத்தி அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்த்தன அவர்களினால் 2007ஆம் ஆண்டு செட்டேம்பர் 1ம் திகதி வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஏழைகளும் நகர வறிய சமூகங்களைச் சேர்ந்தவர்களும் வீட்டு வசதிகளைப் பெற்றுக்கொள்கின்றனர். "மஹந்த சிந்தனை" கொள்கைக்கு அமைய, சமூக பங்கேற்றல் முகாமைத்துவத்துடனும் அதேவேளை உள்ளூர் நிருவாகத்தின் தொழில்நுட்பத்தினை உறுதி செய்யும் வகையிலும் மிகவும் தெளிவான முறையில் நடைமுப்படுத்தப்படுகின்றது.


இந்த நிதி 5000மீ2 5000 சதுர அடிக்கு மேற்பட்ட பரப்பளவைக் கொண்டதாக அமைக்கப்படுகின்ற கட்டடத் தொகுதியின் எதிர்பார்க்கப்பட்ட செலவின் 1% வரியாக பெறப்படுகின்றது.  இதுவரை ரூபா 500 மில்லியன் நிதி வரியாக வசூல் செய்யப்பட்டு செலவு செய்யப்பட்டுள்ளது.  இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதியிருந்து கடந்த இரண்டு வருட காலத்தினுள் 3500 விடுகள் கட்டப்பட்டு சேரி வீடுகளும் குடிசை வீடுகளும் மண்வீடுகளும் வெவ்வேறு நகரங்களின் மாற்றீ்டு செய்யப்பட்டுள்ளன.
இந் நிகழ்ச்சி நகர குடியிருப்பு அதிகாரசபை (USDA) மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.